குடியாத்தம்: மோர்தானா அணையில் இருந்து இன்று முதல் 16 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தமிழக - ஆந்திர எல்லையோரம் உள்ள மோர்தானா அணை வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய அணையாகும். 261 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து இன்று முதல் 16 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், குடியாத்தம் மற்றும் கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.