பென்னாகரம்: மாமரத்துபள்ளம் அரசு கலைக்கல்லூரியில் தொலைத்தொடர்பு நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த மாமரத்துபள்ளம் அரசு கலைக்கல்லூரியில் தொலைத்தொடர்பு நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.நிகழ்ச்சியில் நுகர்வோர் ஆதரவு குழு உறுப்பினர் ஜான் திருநாவுகரசு கலந்து கொண்டு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிகள், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து விளக்கி கூறினார் .