அருப்புக்கோட்டை: ராமசாமிபுரம் விலக்கில்
தேர்தல் அதிகாரிகளின் வாகன சோதனையில் ஆட்டோவில் பெண் கொண்டு சென்ற ரூ 1,40,000 பணம் பறிமுதல்.
அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் விலக்கு பகுதியில் இன்று ஏப்ரல் 8 தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதித்ததில் அதில் பயணம் செய்த ராமசாமிபுரத்தை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் ரூ 1,40,000 கொண்டு சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தினர்