காரைக்குடி: காரைக்குடியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் 20 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கிய அமைச்சர்
காரைக்குடியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில் முகாமை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார். இதில் 20 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள்,61 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், 9 பேருக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.மேலும் ரூ.3000 மதிப்பிலான பரிசோதனைகள் வழங்கப்படுவதாகவும்,தமிழக அரசின் உலகத்தர மருத்துவ சேவைகளை வழங்கிவருவதாக அமைச்சர் தெரிவித்தார்