மரக்காணம்: அன்னை சமுதாய கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம்
மரக்காணம் பேருந்து நிலையம் அருகே அன்னை சமுதாய கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, அன்னை சமுதாய கல்லூரி மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பில் முகாம் நடைபெற்றது. இந்த இலவச முகாமில் மரக்காணத்தை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு கண்களை பரிசோதனை செய்தனர்.