விருதுநகர்: அரசு போக்குவரத்து கழகம் பணிமனை முன்பு சிஐடியு போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தினர் 50வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்
விருதுநகர் அரசு போக்குவரத்துக் கழகம் பணிமனை முன்பு போக்குவரத்து ஊழியர்கள் 50வது நாளாக தேர்தல் வாக்குறுதியின்படி பழைய பென்சன் வழங்க வேண்டும் உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதி அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்