நல்லம்பள்ளி வாரச்சந்தையில் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கிருஷ்ணகிரி திருப்பத்தூர் சேலம் திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் ஆடுகளை விற்க, வாங்க வந்திருந்தனர். மேலும், ஆடுகள் ரூ.4000 - ரூ.23,000 வரை என இன்று காலை 9 மணி நிலவரப்படி 47 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.