திருத்தணி: சிவசக்தி நகரில் பொது மக்களை தாக்கிய வடமாநில இளைஞரை கட்டி வைத்து துவைத்த பொதுமக்கள்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட சிவசக்தி நகர் பகுதியில் இன்று மாலை அவ்வழியாக சாலையை கடந்து சென்றவர்களை வட மாநில இளைஞர் ஒருவர் செங்கற்களால் தாக்கி ரகளை செய்துள்ளார்,இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒன்றை இணைந்து அத்தகைய வடமாநில இளைஞனை பிடித்து கட்டி வைத்து அடித்து துவைத்தனர், போலீசார் பொதுமக்களிடமிருந்து வட மாநில இளைஞரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்