திருப்பத்தூர்: திருப்பத்தூரில் அருள்மிகு பூமாயி அம்மன் கோயிலில் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் எய்த அம்பு! பெண்கள், இளைஞர்கள் ஆர்ப்பரித்தபடி பிடித்தனர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா செப்.23ல் தொடங்கியது. உற்சவர் பூமாயி அம்பாள் அலங்காரங்களுடன் எழுந்தருளினார். பஜனை, பிரபந்த பாடல்கள் பாடப்பட்டன. மூலவருக்கு சிறப்பு அலங்காரம், திருவிளக்கு பூஜை, லட்ச்சார்ச்சனை நடைபெற்றன. நிறைவு நாளில் அம்பாள் குதிரை வாகனத்தில் வில்-அம்புடன் வலம் வந்து அம்பு எய்தினார். பக்தர்கள் ஆர்ப்பரித்து அம்பை எடுத்தனர். வாழை மரம் வெட்டப்பட்டு விழா நிறைவடைந்தது.