கீழக்கரை: திருப்புல்லாணி கோவிலுக்கு சென்று திரும்பிய கணவன் மனைவி விபத்தில் படுகாயம்
பெருங்குளம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 40). இவர் தனது மனைவி நாகேஸ்வரி (35) என்பவருடன் மோட்டார் சைக்கிளில்  திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் கோவிலுக்கு புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி சாமி கும்பிட சென்றார்.  சாமி கும்பிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். ராணி மங்கம்மாள் வந்து கொண்டிருந்தபோது இருவரும் நிலைத்தடுமாறி விழுந்தனர் இதில் நாகேஸ்வரி தலையில் படுகாயம் அடைந்தார்