அருப்புக்கோட்டை: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது
அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்க்கும் பணி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வள்ளிக்கண்ணு முன்னிலையில் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சி பிரதிநிதிகள், தேர்தல் அலுவலர்கள் மாதிரி வாக்கு பதிவு செய்து வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்க்கப்பட்டது.