பொன்னேரி: புழலில் வாக்காளர்களுக்கு அமைக்கப்பட்ட உதவி மையத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வையிட்டார்
எஸ்.ஐ .ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணி தொடங்கி நடைபெற்று வருவதால் திருவள்ளூர் மாவட்டத்தில் மாதாவரம் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை விநியோகித்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திரும்ப பெற்று கணினி மயமாக்கல் தொடர்பான பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்