வங்கக் கடலில் ஏற்பட்ட டித்வா புயல் சின்னம் காரணமாக 28 ஆம் தேதியிலிருந்து 30 ஆம் தேதி வரை தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் 55,000 ஏக்கருக்கு மேல் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. மழை நின்ற நிலையில் வயல் வழிகளில் இருந்து தண்ணீரை வடிவமைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு மேல் தண்ணீரில் மூழ்கியுள்ள பயிர்கள் அழுகத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வேளாண் துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பயிர் பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணி