சிங்கம்புனரி: சிங்கம்புணரியில் காளையின் கால்களில் நான்கு சலங்கை கட்டி எருதுகட்டு விழா-மூன்று சலங்கை விழுந்ததால் முப்போகம் விளையும் கிராம மக்கள் நம்பிக்கை
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் புரட்டாசி மாதத்தில் எருதுகட்டு விழா நடைபெற்றது. வெள்ளை காளையின் கால்களில் நான்கு சலங்கைகள் கட்டப்பட்டு, தீர்த்தம் தெளித்து அவிழ்த்து விடப்பட்டது. இளைஞர்கள் விரட்டியபோது மூன்று சலங்கைகள் விழுந்தன. இதனால் நல்ல மழை பெய்து மூன்று போகம் சாகுபடி இருக்கும் என மக்கள் நம்பிக்கையுடன் இறைவனை வழிபட்டு விவசாயப் பணிகளைத் தொடங்க உள்ளனர்.