கொடைக்கானல்: குருசாமிபள்ளம் பகுதியில் காட்டுமாடு தாக்கி மூதாட்டி படுகாயம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குருசாமிபள்ளத்தை சேர்ந்த பாப்பா(70) இவர் வீட்டிலிருந்து வெளியே வந்த போது மழை, அடர் பனிமூட்டத்தில் எதிரே வருபவர்கள் தெரியாத நிலையில் அங்கிருந்த புதரில் இருந்த காட்டுமாடு தாக்கியதில் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனை அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்டார்.