வாலாஜாபாத்: புளியம்பாக்கம் பாலாற்றங்கரையில் 5,000 பனை விதைகள் நடவு
வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் மாசிலாமணி முதலியார் மேல்நிலைப் பள்ளி, ஜெயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, புளியம்பாக்கம் மற்றும் பழையசீவரம் நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்று மரக்கன்றுகள் நடவு செய்தனர். காஞ்சிபுரம் வனச்சரக அலுவலர் ராமு, தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் கேமதி, விதைகள் தன்னார்வ அமைப்பாளர் பசுமை சரண் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர் வெங்கடேசன் இயற்கை ஆர்வலர் சசிகுமார் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.