ஆவடி: கொரட்டூரில் பெண் தவறிவிட்ட செல்போனை இடியாப்பம் விற்கும் நபர் நைசாக எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது
கொரட்டூர் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த பெண் விஜயலட்சுமி. அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வரும் இவர் நேற்று மாலை சாலையில் செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது தனது கையில் இருந்த மற்றொரு செல்போன் தவறுதலாக கீழே விழுந்துள்ளது. இதனை கவனிக்காமல் அவர் செல்போனில் பேசியபடி கடந்து சென்று விட்டார். அந்த செல்போனை இடியாப்பம் விற்கும் நபர் எடுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் இன்று மதியம் வெளியாகி உள்ளன.