எட்டயபுரம்: கசவன் குன்று கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு விழா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கசவன் குன்று கிராமத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜீவி மார்க்கண்டேயன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டை வைத்து பணிகளை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் ஒன்றிய செயலாளர் நவநீதக்கண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.