ஆவடி: அம்பத்தூரில் வீட்டில் அத்துமீறி நுழைந்த 2 பெண்களை மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த மக்கள்
அம்பத்தூர் வி.ஜி.என் குடியிருப்பு பகுதியில் வீட்டு வளாகத்தில் வீட்டின் உரிமையாளர் அனுமதி இல்லாமல் பெண் இருவர் நாய்களுக்கு உணவு வைக்க வந்ததாக கூறி திருட்டு சம்பவத்தில் ஈடுபட முயன்றதாக அப்பெண்ணை அப்பகுதி மக்கள் விரட்டி சென்று மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணை அடிப்படையில் இரண்டு பெண்களும் தெரு நாய்களுக்கு உணவளிக்க வந்திருந்ததாகவும் நாய்கள் சாலையில் இல்லை என்பதால் வீட்டுக்குள் இருந்திருக்கலாம் என சந்தேகத்து வீட்டில் சென்றதாக கூறியுள்ளனர். பின்னர் அறிவுரை கூறி இருவரையும் அனுப்பி வைத்தனர்