கொடைக்கானல்: தாண்டிக்குடி அருகே காரின் மீது மரம் விழுந்து ஒருவர் பலி
கொடைக்கானல் கீழ் மழை கிராமமான பெரியூர் அருகே பள்ளத்து கால்வாய் குரங்கு பாறை சாலை வழியாக சென்று கொண்டிருந்த காரின் மீது சாலையோரத்தில் இருந்த மரம் காரின் மீது விழுந்து காரை ஓட்டி சென்ற பட்டிவீரன்பட்டியை சேர்ந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பலியானார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாண்டிக்குடி போலீசார் ஜேசிபி மூலம் மரத்தை அகற்றி மணிகண்டனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்