திண்டுக்கல் கிழக்கு: 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் மாவட்ட தலைவர் வினோத் பாலு தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. களப்பணியாளர்களின் நிலம் சார்ந்த அனைத்து பராமரிப்பு பணிகளையும் கருத்தில் கொண்டு இணைய வழி உட்பிரிவு பட்டா மாறுதலில் உள்ள மனித சக்திக்கு மீறிய பணி குறியீடு குறைத்திட வேண்டும் என உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.