திண்டுக்கல் கிழக்கு: நொச்சி ஓடைப்பட்டி அருகே கார்த்திகை தீப விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது
நத்தம், வேடப்பட்டி, நொச்சி ஓடைப்பட்டி ஆகிய பகுதிகளில் மண் பாண்ட தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர் கார்த்திகை தீப திருநாளுக்காக விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாகரீக வளர்ச்சியினால் பீங்கான், மெழுகினால் செய்யப்பட்ட விளக்குகள் வந்தாலும், மண் விளக்குகளுக்கு இன்னும் மவுசு குறையவில்லை. சிறிய அகல் விளக்கு ரூ.1 முதல் ரூ.5 வரை விற்கப்படுகிறது. சாதாரண மண் விளக்குகள் மட்டுமின்றி, தட்டு விளக்கு, மொரம் விளக்கு, காமாட்சி விளக்கு, மேஜிக் விளக்கு, ஆரத்தி தட்டு விளக்கு உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்ற