திருத்தணி: சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் பிரபல நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா சாமி தரிசனம் செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும் இந்த திருக்கோயிலில் பிரபல திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா இன்று காலை சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்தார்,அவருக்கு திருக்கோயில் சார்பில் சிறப்பு வழியில் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது இதில் விநாயகப் பெருமான், உற்சவர் சண்முகப் பெருமான், உற்சவர் முருகப்பெருமான் மூலவர் முருகப்பெருமான் ஆகிய சன்னதிகளில் சிறப்பு தரிசனம் செய்தார்