ஆவடி: TTR வேலை வாங்கி தருவதாக கூறி 28 லட்சம் மோசடி செய்த தம்பதியரை போலீசார் கைது
செய்தனர்
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் அவருக்கு இரயில்வேயில் TTR வேலை வாங்கித் தருவதாக கூறி அதே பகுதியைச் சேர்ந்த கோபிநாத் அவர் மனைவி சிவகாமி அவரிடம் 28 லட்சம் பணம் பெற்று போலியான பணியாளை கொடுத்து ஏமாற்றியுள்ளனர்,இது தொடர்பாக அஜித்குமார் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகார் அடிப்படையில் குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து டி டி ஆர் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த கோபிநாத் அவரது மனைவி சிவகாமி இருவரை கைது செய்து இன்று மதியம் சிறையில் அடைத்தனர்