வேடசந்தூர்: காக்கா தோப்பூர் பிரிவில் இரண்டு லாரிகள் மோதி கொண்டதில் டிரைவர் படுகாயம்
வேடசந்தூர் அருகே உள்ள காக்கா தோப்பூர் பிரிவில் தூத்துக்குடியில் இருந்து வேடசந்தூருக்கு உப்பு மூட்டைகளை ஏற்றி வந்த லாரி சாலையை கடப்பதற்காக குறுக்கே புகுந்தது. அப்பொழுது ஓசூரில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி காய்கறிகளை ஏற்றிச் சென்ற ஈச்சர்லாரி குறுக்கே புகுந்தலாரியின் பின்பக்கமாக மோதி நொறுங்கியது. இதில் ஈச்சர் லாரியின் டிரைவர் லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார். தகவல் அறிந்த வேடசந்தூர் தீயணைப்புத் துறையினர் போராடி இடிபாடுகளுக்குள் சிக்கிய வரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.