மரக்காணம்: மரக்காணம் சக்திநகர் பகுதியில் ஸ்ரீ வடசமயபுரம் மாரியம்மன் ஆலயத்தில் மயான கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
மரக்காணம் சக்தி நகர் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ வடசமயபுரம் மாரியம்மன் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஸ்ரீ வெட்காளியம்மன் ஆலய 15 ஆம் ஆண்டு மயான கொள்ளை திருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது. கடந்த 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு இன்று காலை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து மதியம் 2 மணிக்கு காளி வேடங்களுடன் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் புறப்பட்டு வீதி உலா