திருச்செந்தூர்: ஆத்தூரில் வெற்றிலை உற்பத்தி பாதிப்பு விவசாயிகள் வேதனை
ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 800 ஏக்கரில் விவசாயிகள் வெற்றிலை பயிர் செய்து வந்தனர். ஆத்தூர் வெற்றிலை புவிசார் குறியீடு பெற்றது. இந்நிலையில் இயற்கை சீற்றங்கள் வெற்றிலை தாக்கும் நோய்கள் போன்றவற்றால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வெற்றிலை விவசாயம் மெல்ல மெல்ல நசிந்து வருகிறது. இதனால் தற்பொழுது சுமார் 400 ஏக்கரில் மட்டுமே வெற்றிலை பயிரிடப்பட்டு வருகிறது. அரசு நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்