நடுக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோவிலில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் நடந்த திருவிழாவில் இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இருதரப்பினருக்கும் பிரச்சனை உண்டாகாமல் இருக்க கோவில் திருவிழாவை நடத்தக்கூடாது என அதிகாரிகள் தடை விதித்தனர். இதன் காரணமாக ஏழு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருக்கிறது. இதனால் நடுக்குப்பம் பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவில் வளாகத்தில் திரண்டு திருவிழா நடத்துவதற்கான தடையை நீக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் அறிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.