பொன்னேரி: நந்தியம்பாக்கத்தில் நாய்கள் தொல்லை தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளரிடம் விலங்கு நல ஆர்வலர் வாக்குவாதம்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஆனந்தா நகரில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. தனிநபர் ஒருவரது வீட்டில் ஏராளமான தெருநாய்களை வளர்த்து வருவதாகவும். அத்தகைய தெருநாய்களை வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் அளித்த புகாரின் படி போலீசார் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் காவல் நிலையம் வருமாறு அழைத்ததை செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரிடம் விலங்கு நல ஆர்வலர் வாக்குவாதம் செய்தால் பரபரப்பு ஏற்பட்டது