விளாத்திகுளம்: சங்கரப்ப நாயக்கன்பட்டி மற்றும் ஜெகவீராபுர புரம் உள்ளிட்ட கிராமத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கரப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 17.10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது தொடர்ந்து ஜெகவீராபுர புரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஏழு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பயணியர் நிழல் குடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.