வேடசந்தூர்: இரண்டாவது வார்டு பகுதியை சேர்ந்த திருமணம் ஆன பெண்ணுக்கும் திருமணமான ஆணுக்கும் திருமணத்தை மீறிய திருமணம்
வேடசந்தூர் இரண்டாவது வார்டு பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் திருவிழாவிற்காக வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த 25 வயது திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. ஒரு வருடமாக இருவரும் காதலித்து வந்த நிலையில் திடீரென இருவரும் காணாமல் போய்விட்டனர். இதுகுறித்து பெண்ணின் தாயார் அளித்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசார் திருப்பூரில் தங்கி குடும்பம் நடத்தி வந்த இருவரையும் பிடித்து கொண்டு வந்தனர்.