சாத்தான்குளம்: முதலூர் கிராமத்தில் ஊரணி குளம் தூர்வாரப்படாததால் நீர் சேமிக்க முடியாத நிலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் பயன்பெறும் வகையில் 1883ம் ஆண்டு ஊரணி குளம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த ஊரணி குளம் தொடர்ந்து முறையாக பராமரிக்கப்படாததால் தற்போது தூர்ந்து போய் போதிய அளவு நீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த ஊரணி குளத்தை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.