ஓசூரில் பிரபல வாட்ச் கம்பெனி ஷோரூமில் 5 லட்சம் மதிப்புள்ள தங்க வாட்ச் திருட்டு : போலீசார் விசாரணை ஓசூர் முதல் சிட்காட் பகுதியில் இயங்கி வரும் டைட்டான் வாட்ச் தயார் செய்யும் கம்பெனி அருகில் வாட்ச் விற்பனை செய்யும் ஷோருமும் உள்ளது. நேற்று மதியம் இந்த ஷோரூமுக்கு வந்த ஒரு நபர், தங்க கடிகாரங்கள் இருக்கும் பகுதிக்கு சென்று விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வாட்ச்களை பார்வையிட்டுள்ளார்.