சிங்கம்புனரி: மாவட்டத்தில் 119.00 மி.மீ மழை பதிவு-அதிகபட்சமாக சிங்கம்புணரியில் 53.20 மி.மீ பதிவு, மாவட்ட நிர்வாகம் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் கனமழை வரை பெய்தது.இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன்படி சனிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி, சிவகங்கை 1.40 மி.மீ, இளையான்குடி 12.00 மி.மீ, திருப்புவனம் 29.80 மி.மீ, காளையார்கோவில் 22.60 மி.மீ, சிங்கம்புணரி 53.20 மி.மீ மழை பெய்துள்ளது. மாவட்ட சராசரி 13.22 மி.மீ, மொத்தம் 119.00 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.