ஊத்துக்கோட்டை: நெய்வேலி பகுதியில் இடி தாக்கி எருது மாடு உயிரிழப்பு,
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த நெய்வேலி கிராமத்தில் வசிக்கும் கோடீஸ்வரனுக்கு சொந்தமாக எருது மாடுகள் இருந்து வருகின்றது, இன்று அதிகாலை இடி மின்னலுடன் பெய்த கன மழை காரணமாக மின்னல் தாக்கியதில் அதில் ஒரு எருது மாடு உயிரிழந்தது, இதனைக் கண்ட மாட்டின் உரிமையாளர் கோடீஸ்வரன் குடும்பத்தினர் தனது குடும்பத்திற்கு வருமானத்தை ஈட்டி தந்த மாட்டின் இழப்பை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி காண்போரையும் கண்கலங்க வைத்தது