ஒட்டன்சத்திரம்: வடகாட்டில் மாற்றுக் கட்சியினர் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி மத்திய ஒன்றியம் வடகாடு ஊராட்சியை சேர்ந்த பல்வேறு மாற்று கட்சியினர் அக்கட்சியில் இருந்து விலகி வடகாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி ஒட்டன்சத்திரம் மத்திய ஒன்றிய செயலாளர் எஸ் ஆர் கே பாலு மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.