விருதுநகர்: இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பியவர்கள் மழை வெள்ளத்தில் சிக்கினார் மூன்று பேர் உயிருடன் மீட்பு ஏழு வயது சிறுவன் உயிர் இழப்பு
விருதுநகர் அருகே கோவில் வீரார் பட்டியைச் சேர்ந்த அய்யனார் மற்றும் அவரது மனைவி அவரது மகன் உறவுக்கார பையன் நான்கு பேரும் இருசக்கர வாகனத்தில் மலைப்பட்டி கோவிலுக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது ஓடையில் உள்ள மழை வெள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் அடித்துச் செல்லப்பட்டனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மூன்று பேரை உயிருடன் மீட்டனர் 7 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்டனர் சூலக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.