காரைக்குடி: தளக்காவூரில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்
காரைக்குடி அருகே தளக்காவூரில் அதளநாயகி அம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடந்தது.சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை,புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 23 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. மாணகிரி கல்லல் மாநில நெடுஞ்சாலையில் நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும் சாரதிகளுக்கும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.