ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதி சேர்ந்த முக்கிய பிரமுகர் முகமது ஹாஷிம் வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். இந்த நிலையில் மேல்விசாரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் நேரில் சென்று முகமது ஹாஷிமின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.