சாத்தான்குளம்: நகனை கிராமத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் கபடி பயிற்சியாளர்க்கு மரியாதை
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் திரைப்படம் தூத்துக்குடி மாவட்டம் மனத்தி கிராமத்தை சேர்ந்த கபடி வீரர் கணேசனின் வாழ்க்கை வரலாறு ஆகும். இந்நிலையில் கபடி வீரர் கணேசனுக்கு கபடி பயிற்சி அளித்த சாத்தான்குளம் அருகே உள்ள நகனை கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவரின் இல்லம் தேடி சென்ற இயக்குனர் மாரி செல்வராஜ் அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.