சிங்கம்புனரி: சிங்கம்புணரியில் நடந்த மாட்டுவண்டி பந்தயத்தில் ஆபத்தை உணராமல் காரின் மீது ஏறி ஓடிய துணை சாரதி-வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்*
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது பிறந்தநாள் விழாவையொட்டி 26 ஜோடி மாட்டுவண்டிகள் பங்கேற்ற பந்தயம் நடந்தது. திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் பெரியமாடு 8 மைல் தூரம் சின்னமாடு 6 மைல் தூரமும் பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தின் போது காளாப்பூர் பெரியபாலம் தாண்டி துணை சாரதி வேகமாக ஓடி, காரின் மீது ஏறி இறங்கி மாட்டுடன் ஓடினார். இதில் கார் சேதமடைந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது