அருப்புக்கோட்டை: பாலவநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் உடன் இணைந்து காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்கு சேகரித்தார்.
அருப்புக்கோட்டை ஒன்றிய பகுதிகளான சூலக்கரை, பாலவனத்தம், வில்லிபத்திரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று ஏப்ரல் 8 காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் உடன் இணைந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய மாணிக்கம் தாகூர் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் எனவும் சம்பளம் ரூபாய் 400 வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.