கிருஷ்ணராயபுரம்: மேட்டுமகாதானபுரம் கடைவீதியில் அனுமதி பெறாமல் தேர்தல் பிரச்சாரம் செய்த நாம் தமிழர் கட்சி கரூர் நாடாளுமன்ற வேட்பாளர் மீது போலீசார் வழக்கு பதிவு
கரூர் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா மற்றும் பலர் கரூர் மாவட்டம் மேட்டு மகாதானபுரம் கடை வீதியில் அனுமதி பெறாமல் கொடிக்கம்பங்களை கட்டி தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளனர். இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜெகநாதன் அளித்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா மற்றும் பலர் மீது நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.