திருத்துறைப்பூண்டி: பழைய பேருந்து நிலையம் முன்பு சிஐடியூசி சார்பில் நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் முன்பு சிஐடியூசி சார்பில் நகராட்சி நிர்வாகத்திற்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக சாலையோர வியாபாரிகளுக்கு மீண்டும் அதே இடத்தில் கடை நடத்த நகராட்சி நிர்வாகம் அனுமதிக்க வேண்டுமென கட்சி நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.