திருத்துறைப்பூண்டி: பி.எஸ்.டி. திடலில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகை
திருத்துறைப்பூண்டி பி.எஸ்.டி. திடலில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த நிகழ்வில் இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி ரமலான் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டு புத்தாடைகள் உடுத்தி ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் திரளான இஸ்லாமியர்கள் உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.