திருப்பத்தூர்: மாவட்டத்தில் சிங்கம்புணரி பகுதியை தவிர்த்து அனேக இடங்களில் பரவலாக மழை-மொத்தமாக 243.60 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஓரிரு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஞாயிறு மாலை சிங்கம்புணரி தவிர பல இடங்களில் மழை பதிவாகியது. திங்கள் காலை 6 மணி நிலவரப்படி, சிவகங்கை 29 மி.மீ, மானாமதுரை 43 மி.மீ, இளையான்குடி 43 மி.மீ, திருப்புவனம் 40.4 மி.மீ, திருப்பத்தூர் 13.6 மி.மீ, காரைக்குடி 8 மி.மீ, தேவகோட்டை 50 மி.மீ, காளையார்கோவில் 16.6 மி.மீ மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரி 27.07 மி.மீ, மொத்தம் 243.6 மி.மீ மழை பதிவாகியதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது