எரியோடு டாஸ்மார்க் கடையில் எலப்பார்ப்பட்டி மற்றும் எரியோடு மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றார். இது குறித்த வழக்கில் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த எட்டு பேர் கைது செய்யபட்டு நாள்தோறும் எரியோடு போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட வந்தனர். கையெழுத்து போட்டு விட்டு சென்ற நபர்கள் மீது மர்ம நபர்கள் அரிவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களில் தாக்கியதில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து எரியோடு போலீசார் ஒருவரை கைது செய்தனர்.