குளித்தலை: அய்யர்மலை, குளித்தலை, பணிக்கம்பட்டி, நங்கவரம் பகுதிகளில் பாஜக வேட்பாளர் பாரிவேந்தர் தேர்தல் பிரச்சாரம்
குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யர்மலை, குட்டப்பட்டி, குளித்தலை பேருந்து நிலையம், பெரிய பாலம், பணிக்கம்பட்டி இனுங்கூர், நங்கவரம் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் ஐஜேகே, பாஜக, பாமக, தமிழர் தேசம் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்