சிங்கம்புனரி: அரசினம்பட்டியி்ல் பதுங்கி இருந்த 7அடி நீளம் கொண்ட நல்ல பாம்பினை தீயணைப்புத்துறையினர் மீட்டு வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்
சிங்கம்புணரி அருகே அரசினம்பட்டியில் சரவணனின் மஞ்சி தயாரிக்கும் தொழிற்சாலையில் 7 அடி நீளமுள்ள நல்லபாம்பு பதுங்கியிருந்தது. தொழிலாளர்கள் அலறி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு அலுவலர் பிரகாஷ் தலைமையில் வீரர்கள் பாம்பை பத்திரமாக பிடித்து, ஆக்ரோஷமாக படமெடுத்த அந்த விஷப்பாம்பை பைப்பில் அடைத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.