அருப்புக்கோட்டை: ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அருப்புக்கோட்டை அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று ஏப்ரல் 12 வெகு விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முத்து மாரியம்மன் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு மகிழ்ந்தனர்.